நெருப்பு நரியின் மிக சிறந்த துணை நிரல்களில் இதுவும் ஓன்று . வலை
பக்கத்தில் காட்டப்படும் தேவையற்ற விளம்பரங்களை வடிகட்டி மறைக்கின்றது
. நமக்கு தேவை பட்டால் இதை நாம் அணைத்து வைத்து கொள்ளலாம் .
இப்பொழுது அனைத்து வலை பக்கங்களும் முகபுத்தக நிரல் பலகையை (widget)
கொண்டுள்ளன . அவை நம் உலாவியில் வழியாக நம்முடை தகவல்களை திருடுகின்றன (
நாம் உள் நுழையவில்லை என்றாலும் ).இந்த நிரலை நிறுவுவதால் , நம்முடை
வலை உலாவலை தனிமைபடுத்தி முக புத்தகம் பிற தகவல்களை எடுக்க முடியாமல்
செய்கின்றது .
குக்கீ என்பது ஒரு வலைத்தளம் மற்றும் பயனாளர் பற்றிய
தகவல்களை கொண்டுள்ள சிறிய கோப்பாகும் .ஒரு சில குக்கிகள் வலை பக்கத்தை
மூடும் பொது அழிந்துவிடும் . சில குக்கிகள் சில நேரங்கள் நமது கணினியில்
இருந்து கொன்டே இருக்கும்.பெரும்பாலான வலை தளங்கள் நம் உலாவியில் வழியாக
நம்மை கண்காணிக்க குக்கிகள் பயன்படுத்துகின்றன . இந்த நிரலி வ
வலைப்பக்கம் அல்லது உலாவியை மூடும் பொது குக்கியே அழித்து விடுகின்றன .
இதை நாம் சில நம்பிக்கைக்குரிய வலை பக்கங்களுக்கு அணைத்து வைத்து
கொள்ளலாம் .
இந்த நிரலி பாதுகாப்பற்ற இணைய உள்ளடக்கத்தை தடை செய்கிறது . ஜாவா
ஸ்கிரிப்ட் , வெப் RTC போன்றவற்றை நாம் தடை செய்து வைத்து கொள்ளலாம்
.நாம் அடிக்கடி பயன்படுத்துகிற இனிய தலங்களுக்கு இதை அணைத்து வைத்து
கொள்ளலாம் . இதை உபயோகித்தால் 90 % இணைய பக்கங்கள் சரியாக வேலை
செய்யாது .நான் இதை பெரும்பாலும் இனிய பக்கத்தில் உள்ள விளம்பர சேவையை
தடுக்க பயன் படுத்துகின்றேன் .
இந்த நிரல் இணையத்தில் பாதுகாப்பாக உலாவ உதவி செய்கிறது. இது
எப்போதும் பாதுகாப்பான (https) இணைய பக்கத்தை ஏற்ற முயல்கிறது .இதனால்
நமக்கு கூடுதல் பாதுகாப்பான இணைய பக்கம் உலாவியில் பயன் படுத்த
முடிகின்றது