February 08, 2020

சில பயனுள்ள நெருப்பு நரி(firefox) உலாவியின் துணை நிரல்கள்(add-ons)







இங்கே நான் பயன்படுத்தும் சில நெருப்பு நரி  உலாவியின்  துணை நிரல்கள் தொகுத்துள்ளேன்

1.அட்ப்ளாக்  பிளஸ் (adblock plus) 
                                                     நெருப்பு நரியின் மிக சிறந்த துணை நிரல்களில்  இதுவும் ஓன்று . வலை  பக்கத்தில் காட்டப்படும்  தேவையற்ற  விளம்பரங்களை  வடிகட்டி   மறைக்கின்றது . நமக்கு தேவை பட்டால்  இதை  நாம் அணைத்து  வைத்து கொள்ளலாம் .

2.முக புத்தகம்  கன்டைனர் (facebook container)
                              இப்பொழுது  அனைத்து வலை பக்கங்களும்  முகபுத்தக  நிரல் பலகையை (widget) கொண்டுள்ளன . அவை நம் உலாவியில்  வழியாக  நம்முடை தகவல்களை  திருடுகின்றன ( நாம்  உள் நுழையவில்லை  என்றாலும் ).இந்த நிரலை  நிறுவுவதால் , நம்முடை  வலை உலாவலை  தனிமைபடுத்தி  முக புத்தகம் பிற  தகவல்களை  எடுக்க முடியாமல்  செய்கின்றது .

3.குக்கீ ஆட்டோ டெலீட் 
                   குக்கீ என்பது  ஒரு வலைத்தளம் மற்றும் பயனாளர் பற்றிய  தகவல்களை  கொண்டுள்ள சிறிய கோப்பாகும் .ஒரு சில குக்கிகள்  வலை பக்கத்தை மூடும் பொது அழிந்துவிடும் . சில குக்கிகள் சில நேரங்கள் நமது கணினியில் இருந்து கொன்டே இருக்கும்.பெரும்பாலான  வலை தளங்கள் நம் உலாவியில்  வழியாக  நம்மை  கண்காணிக்க  குக்கிகள்   பயன்படுத்துகின்றன  . இந்த நிரலி  வ வலைப்பக்கம்  அல்லது  உலாவியை  மூடும் பொது  குக்கியே  அழித்து விடுகின்றன . இதை  நாம்  சில நம்பிக்கைக்குரிய வலை பக்கங்களுக்கு  அணைத்து  வைத்து கொள்ளலாம் .

4. நோ  ஸ்கிரிப்ட் 
        இந்த நிரலி பாதுகாப்பற்ற  இணைய  உள்ளடக்கத்தை  தடை செய்கிறது . ஜாவா ஸ்கிரிப்ட் , வெப்  RTC   போன்றவற்றை  நாம் தடை செய்து  வைத்து  கொள்ளலாம் .நாம் அடிக்கடி பயன்படுத்துகிற இனிய தலங்களுக்கு  இதை அணைத்து வைத்து கொள்ளலாம் . இதை  உபயோகித்தால் 90 %  இணைய  பக்கங்கள்  சரியாக  வேலை  செய்யாது .நான்  இதை பெரும்பாலும்  இனிய பக்கத்தில் உள்ள  விளம்பர சேவையை தடுக்க  பயன் படுத்துகின்றேன் .
 
5. https  everywhere
          இந்த நிரல்  இணையத்தில் பாதுகாப்பாக உலாவ  உதவி செய்கிறது. இது  எப்போதும்  பாதுகாப்பான (https) இணைய பக்கத்தை  ஏற்ற  முயல்கிறது .இதனால் நமக்கு  கூடுதல்  பாதுகாப்பான  இணைய  பக்கம் உலாவியில்  பயன் படுத்த  முடிகின்றது

சில பயனுள்ள நெருப்பு நரி(firefox) உலாவியின் துணை நிரல்கள்(add-ons)

இங்கே நான் பயன்படுத்தும் சில நெருப்பு நரி  உலாவியின்  துணை நிரல்கள் தொகுத்துள்ளேன் 1. அட்ப்ளாக்  பிளஸ் (adblock plus)     ...